28/08/2024

முன்பள்ளிப் பாடசாலைகளில் திடீர் பரிசோதனை.!*

முன்பள்ளிப் பாடசாலைகளில் திடீர் பரிசோதனை.!*
கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள முன்பள்ளிப் பாடசாலைகளில் இன்று புதன்கிழமை (28) திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வரவர்மன் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள், சுற்றுச்சூழல், மாணவர்களுக்கான முறையான அனுமதி, அவர்களது நாளாந்த வரவு உள்ளிட்ட பல விடயங்கள் பரீட்சிக்கப்பட்டதுடன் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் இங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இனிவரும் காலங்களில் இந்த முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும்போதும் பாடசாலை நடாத்துவது தொடர்பிலும் மாநகர சபையினால் வகுக்கப்படும் விதி முறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட எனவும் உதவி ஆணையாளரினால் வலியுறுத்தப்பட்டது
கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் மருதமுனை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் முன்பள்ளிப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த முன்பள்ளி பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து அனுமதிக் கட்டணம் மற்றும் மாதாந்த கட்டணம் எவையும் அறவிடப்படாமல் முற்றிலும் இலவசமாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை

Loading

Top