09/07/2024
மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு விட நடவடிக்கை.!*
கடந்த பல வருடங்களாக பாழடைந்து காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்முனை மாநகர ஆணையாளராக பொறுப்பேற்று ஒரு சில தினங்களிலேயே இந்த மண்டபத்தினதும் அதன் சுற்றுச்சூழலினதும் அவல நிலையை கவனத்திற் கொண்ட அவர், அதனை உடனடியாக சீர்செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு தீர்மானித்திருந்தார்.
இதற்கு அமைவாக குப்பை கூளங்களாலும் காடு வளர்ந்தும் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டப வளாகம் கடந்த சில தினங்களாக கல்முனை மாநகர சபையினால் துரிதமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது. இதனை பராமரிப்பதற்கென ஊழியரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
விரைவில் இதனை மக்கள் பாவனைக்கு விடுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
One attachment • Scanned by Gmail