மருதமுனை பொது நூலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின சிறப்பு நிகழ்வு.!
மருதமுனை பொது நூலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின சிறப்பு நிகழ்வு.!
2024 ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு “உலகத்தை வென்றவர்கள் வாசித்த மக்களே” எனும் தொனிப்பொருளில் மருதமுனை மருதூர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகம் முதலாவது நிகழ்வாக சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்திருந்த சிறுவர்களுக்கு கதை கூறல், சிறுவர்கள் ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் குளிர்பானம் வழங்கல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுத்தலின் கீழ் இடம்பெற்றது.
இதன்போது நூலக சேவகர் திருமதி ரஸ்மினா பைசால் சிறுவர்களுக்கு கதை கூறினார்.
இந்நிகழ்வில் KMC பாலர் பாடசாலையின் 37 மாணவர்களும் பெற்றோர்களும் வாசகர்களும் கலந்து சிறப்பித்தனர்.