30/08/2024

மருதமுனை நூலகத்தில் “வாசிக்கும் மலர்கள்” சிறுவர் நிகழ்வு.!*

news images

மருதமுனை நூலகத்தில் “வாசிக்கும் மலர்கள்” சிறுவர் நிகழ்வு.!*
நூலகங்களின் செயற்பாட்டினை  வினைத்திறன் மிக்கதாகவும், சிறுவர் சிறுமிகளை வாசிப்ப்பின்பால் ஈர்ப்பதற்காகவும் சிறுவர்களை நூல்களோடும், நூலகத்தோடும்  தொடர்புபடுத்துவதற்காவும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மருத்தூர்க்கனி பொது நூலகமானது தமது நூலகத்திற்கு வந்து வாசிக்கும்  ஒரு தொகுதி சிறுவர்களை அழைத்து  அவர்கள் வாசித்த கதைகள் மற்றும் பாடல்கள், நகைச்சுவைகள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வொன்றினை “வாசிக்கும் மலர்கள்” என்ற தலைப்பில் இன்று பிற்பகல் நாடாத்தியது.
நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்ற சிறுவர்களை கவர்ந்து மகிழ்வுறச் செய்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு  நூலக உத்தியோகத்தர்கள் அன்பளிப்பு பொதிகளுடன், இனிப்புகளையும்  வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வுக்கான அனுசரனையை MACHO எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
நூலகங்களில் சிறுவர் பிரிவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் விடுத்திருந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
👇

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel