29/07/2024

நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுடனான சந்திப்பு.!*

news images

நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுடனான சந்திப்பு.!*

கல்முனை மாநகர சபையில் புதிதாக நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுடனான சந்திப்பு இன்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் மருதமுனை பொது நூலக சமூக வள நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.பாஸித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபையில் நிரந்தர நியமனம் பெற்றுள்ள 102 ஊழியர்களுள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட 99 ஊழியர்களுக்கான முதல் மாத சம்பளம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

மாநகர ஆணையாளர், கணக்காளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் தமது உரைகளின்போது புதிய ஊழியர்களுக்கான வரப்பிரசாதங்கள், கட்டுப்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை எடுத்துரைத்து, அவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர்.

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel