29/07/2024

*சுவர்ணபுரவர தேசிய விருதை உத்தியோகத்தர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு.!*

news images

மாநகர சபைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்றிறன் மதிப்பீட்டில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமைக்காக கல்முனை மாநகர சபைக்கு வழங்கப்பட்ட சுவர்ணபுரவர தேசிய விருதை மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (29) ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், உள்ளூராட்சி உத்தியோகத்தர் சர்ஜுன் தாரிக் அலி, வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் உட்பட பிரிவுத் தலைவர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்ற சுவர்ணபுரவர தேசிய விருது விழாவின்போது கல்முனை மாநகர சபைக்கு இவ்விருது கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Top
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel