21/08/2024
சாய்ந்தமருது பிரதேசம் முழுவதும் கொத்தணி திண்மக்கழிவகற்றல் சேவை.!*
சாய்ந்தமருது பிரதேசம் முழுவதும் கொத்தணி திண்மக்கழிவகற்றல் சேவை.!*
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேசம் முழுவதும் குப்பைகள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் அவசர பணிப்புரைக்கு அமைவாக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பரின் நெறிப்படுத்தலில் இவ்வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.