22/07/2024
*கிறீன் பீல்ட் பிரதேசத்தில் விசேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம்.!*
*கிறீன் பீல்ட் பிரதேசத்தில் விசேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம்.!*
கல்முனை கிறீன் பீல்ட் பிரதேசத்தில் டெங்கு தாக்கத்தை முற்றாக கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையினால் இரண்டு நாள் விசேட சுத்திகரிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை விடுத்த வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் பொறியியல் பிரிவின் ஒத்துழைப்புடன் கனரக வானங்களின் உதவியுடன் இந்த வேலைத் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இப்பிரதேசம் பூராகவும் வீதிகள், பொது இடங்கள், நீரோடைகள் மற்றும் வடிகான்களில் வீசப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான கொள்கலன்கள் யாவும் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.