13/06/2024
கல்முனை மாநகர சபையில் கெளரவிப்பு.!*
*பிரதிப் பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்ற ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் கெளரவிப்பு.!*
கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) பதவி உயர்வு பெற்றுள்ள கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களை கெளரவித்து- வாழ்த்தி மகிழ்வுறும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் முபீனா சம்சுல் அமான் ஆகியோர் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர்.
இதன்போது ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள், கல்முனை மாநகர சபை சமூகம் சார்பில் மாலைகள் அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மாநகர சபையின் சிரேஷ்ட வருமானப் பரிசோதகர் ஏ.ஜே.சமீம் நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்திகழ்வில் மாநகர சபையின் உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உட்பட பிரிவுத் தலைவர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.