02/08/2024

கல்முனை நூலகத்தில் திடீர் களப் பரிசோதனை.!*

news images

*கல்முனை நூலகத்தில் திடீர் களப் பரிசோதனை.!*

கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் இன்று கல்முனை பொது நூலகத்திற்கு திடீர் களப் பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது அங்கு சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தக ராக்கைகளில் புழுதி படிந்துள்ளமை, புத்தகங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படாமை, வாசகர்கள் கோரும் நூல்களை தேடிப் பெறுவதில் உள்ள தாமதம், கழிக்கப்பட்ட தளபாடங்கள் மற்றும் பொருட்கள் அகற்றப்படாமல் காட்சிப் பொருட்களாக காணப்படுகின்றமை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவை குறித்து நூலகர் உட்பட நூலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இக்குறைபாடுகளுக்கு காரணமான நூலக உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் விளக்கம்
கோருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்மத்தப்பட்ட உத்தியோகத்தருக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இவ்விடயத்தை மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் இது போன்று ஏனைய நூலகங்களிலும் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தெரிவித்தார்.

Loading

Top